விநாயகர் கோலம்
விநாயகர் கோலம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காக்கையநல்லூர் பேரூர் என்ற பகுதி உள்ளது. இந்த தலத்தில் உள்ள விநாயகர் ‘வயிறு வெடித்த பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்குரிய தானிய வசூலுக்காக இங்கு வந்த ஒரு புலவருக்கு, சரியான விளைச்சல் இல்லாததால் நெல் கிடைக்கவில்லை. ஆனால் அந்த ஊர் பிள்ளையாருக்கு மட்டும் தினமும் தவறாமல் நைவேத்தியம் நடைபெற்று வந்தது. இதனைக் கண்ட புலவர், ‘அங்கு உன் தம்பிக்கு உணவுக்கே நெல் இல்லை; உனக்கு மட்டும் தினமும் நைவேத்தியம் ஏன்? உன் வீங்கிய வயிறு வெடிக்காதோ?’ என்று வருத்தத்துடன் பாடினார். உடனே விநாயகர் வயிறு வெடித்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. இப்போதும் இந்த தலத்தில் உள்ள விநாயகர் அதே கோலத்துடன் காட்சியளிப்பதை தரிசிக்கலாம்.
கருத்துகள் இல்லை