Flipkart

Breaking News

விஜயகாந்த் கோவையில் -உங்களுடன் நான்

கோவையில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி: 2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி? நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

கோவையில் நடைபெற்ற ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். ‘உங்களுடன் நான்’ என்ற இந்த நிகழ்ச்சி மூலம் அவர் நேரடியாக ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் முதல் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள ராவுத்தர் பிரிவில் உள்ள விஜயகாந்த் தோட்டத்துக்கு சென்று தங்கினார். விஜயகாந்த் ஆலோசனை அங்கு, கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நேற்றுக்காலை நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் ராவுத்தர் தோட்டத்துக்கு காலை 8 மணியளவிலேயே வந்திருந்தனர். விஜயகாந்தை சந்திக்க அனுமதி கிடைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்டம் வாரியாக அமர வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளரும் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் கூட்டத்தில், நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளில் இருந்த சாதக, பாதங்கள் குறித்தும், வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இப்போதே தீவிரமாக பணியாற்றுவது குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், உள்ளுர் பிரச்சினைகளுக்காக பொதுமக்களுடன் இணைந்து போராடுவது, அவற்றை அரசின் பார்வைக்கு கொண்டு செல்வது, கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, கட்சி தொடங்கிய செப்டம்பர் 14–ந் தேதி அன்று அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவது,விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்டு 25–ந் தேதியன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய விஜயகாந்த்,தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் கிளைக்கழகங்களை ஆய்வு செய்து தலைமை கழகத்துக்கு அறிக்கை அனுப்ப கேட்டுக் கொண்டார். புகைப்படம் முன்னதாக தோட்டத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு ஊழியர்கள், தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டை இருக்கிறதா? என்று சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்ற தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், 28–ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை