சுதாகரன் திருமணம் நடந்தது இவ்வாறு???ஜெயலலிதா சொத்து
சுதாகரன் திருமணம் நடந்தது எவ்வாறு?: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேலும் சிக்கல் [Friday, 19/07/2013 02:29 AM] முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கானது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக ஜெயலலிதாவின் ஆடிட்டர் சண்முகம் மற்றும் மூன்றாவது குற்றவாளியாக சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டர் சண்முகத்திடம் அரசு வக்கீல் பவானி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் திருமணத்திற்கு தேவையான செலவுகளை பெண் வீட்டாரும் மற்றும் பரிசு பொருட்களை கட்சி தொண்டர்கள் கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும் இதற்கு சாட்சியாக வருமான வரித்துறையிடம் ஆவணம் கொடுத்திருப்பதும் முற்றிலும் தவறான தகவல்கள் ஆகும். ஆனால் சுதாகரன் திருமணம் உட்பட அனைத்து செலவுகளையும் ஜெயலலிதா தனது சொந்த பணத்தில் செய்தி வைத்துள்ளார் என்றும் வழக்கில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என அரசு சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார். அரசு சட்டத்தரணியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆடிட்டர் சண்முகம் நாங்கள் வருமான வரித்துறையில் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் நியாமானது, அதில் தவறான தகவல் கிடையாது என கூறியுள்ளார். Share
கருத்துகள் இல்லை